மூத்த கருநாடக இசைப் பாடகர் ஒ.வி.சுப்பிரமணியம் காலமானார்

வெள்ளி, சூலை 16, 2010


மூத்த கருநாடக இசைப் பாடகர் சங்கீத பூசணம் ஓ. வி. சுப்பிரமணியம் தனது 94வது அகவையில் கடந்த வாரம் ஜூலை 8 ஆம் நாள் சென்னையில் காலமானார்.


இவர் இவரது மக்களான காலஞ்சென்ற ஒ.எஸ்.ஸ்ரீதர், ஒ.எஸ்.தியாகராஜன், ஒ.எஸ்.அருண், உட்படப் பிரபல கருநாடக இசைக் கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் சென்னையில் வாழ்ந்து வந்தாலும் பல ஆண்டுகள் தலைநகர் புது தில்லியில் வாழ்ந்து வந்தவர்.


சிறு வயதிலேயே கருநாடக் இசையில் நாட்டம் கொண்டிருந்த சுப்பிரமணியம், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், டைகர் வரதாச்சாரியார், தஞ்சை பொன்னையா பிள்ளை போன்றோரிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் அண்ணாமலை இசைக் கல்லூரியில் சேர்ந்து சங்கீத பூசணம் பட்டத்தைப் பெற்றார்.


1940 முதல் 1944வரையும், பின்னர் 1952 முதல் 1995 வரையிலும் புதுதில்லியில் உள்ள சண்முகானந்தா சங்கீத சபையில் மாணவர்களுக்கு கருநாடக இசையைப் பயிற்றுவித்தார்.

மூலம் தொகு

  • Harmony’s harvest, த இந்து, ஜூலை 16, 2010 - (ஆங்கிலத்தில்)