பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்

ஞாயிறு, செப்டம்பர் 13, 2009, ஐக்கிய அமெரிக்கா:


பசுமை புரட்சியின் தந்தை என்று கூறப்படும் அமெரிக்க அறிவிய்லாளர் நார்மன் போர்லாக் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். 95 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.


நோய் தாக்காத அதிக விளைச்சல் தரும் பயிர்களை 1960 ம் ஆண்டுகளின் போது நார்மன் போர்லாக் உருவாக்கினார். இவருடைய கண்டுபிடிப்புகளால் உலகம் முழுவதும் தானிய சாகுபடி அதிகரித்தது, இதற்காக இவருக்கு 1970ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


உலகளாவிய பஞ்சத்தை தவிர்த்த நார்மன் போர்லாக், லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதாக நோபல் அமைப்பு குறிப்பிட்டது.


போர்லாக் அமைதிக்கான நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் மூன்றையும் வென்ற ஐவரில் ஒருவர். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றவர்.

மூலம்

தொகு