மிருதங்க வித்துவான் கே. சண்முகம்பிள்ளை கொழும்பில் காலமானார்
ஞாயிறு, மே 16, 2010
தொடர்புள்ள செய்திகள்
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
இலங்கையின் பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் தனது 92 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை காலமானார்.
மிருதங்கக் கலையை குருகுல வாசம் முறையில் இந்தியாவின் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் கற்றுக்கொண்டவர். இலங்கை வானொலியின் ஆரம்பகால கலைஞர்களில் சண்முகம்பிள்ளையும் ஒருவர். மிருதங்க வித்துவானாக சிறப்புத் தரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். பல பிரபல இலங்கை, இந்திய கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து சிறப்பித்தவர்.
இலங்கை கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும், டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன.
இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார்.
மூலம்
தொகு- மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் நேற்று காலமானார், தினக்குரல், மே 16, 2010