மலேசியப் பொதுத் தேர்தல் 2013: தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது

திங்கள், மே 6, 2013

மலேசியாவில் நேற்று நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி கூட்டணி 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. மொத்தமுள்ள 222 இடங்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி பாக்காத்தான் ராக்யாட் 89 இடங்களைக் கைப்பற்றியது.


மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்

மலேசியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 55 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணி இம்முறையே மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது தடவையாக இக்கூட்டணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது. மலேசிய சீனர்கள் பலர் இம்முறை எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளது குறித்து பிரதமர் நஜீப் கவலை தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் முறைகேடுகள் குறித்து தகுந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இது குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று புதன்கிழமை அன்று இடம்பெறும் என அவர் கூறினார்.


நஜீப் ரசாக் இன்று மாலை மன்னர் முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.


வாக்­­­களிப்பு நேற்று பெரும்பா­லும் அமை­­­தி­­­யான முறை­­­யில் நடந்து முடிந்தது. இம்முறை தேர்தலில் 80 விழுக்காட்டினர் (12,992,661 வாக்காளர்கள்) வாக்களித்துள்ளனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 நாடா­­­ளு­­­மன்றத் தொகு­­­தி­­­கள், மற்றும் 505 சட்­­­ட­­­மன்றத் தொகு­­­தி­­­களில் மொத்தம் 1,900 வேட்­­­பா­­­ளர்­­­கள் போட்­­­டி­­­யிட்­­­ட­­­னர். ­­­­­­­­­­­­­­­சுயேட்சை­­­யாக போட்டியிட்டவர்கள் பலர் வைப்­­­புத்­­­தொகையை இழந்­­­துள்­­­ள­­­னர்.


ம­­­லேசிய இந்திய காங்கிரசு (மஇகா) தலை­­­வர் ஜி. பழனிவேல் 462 வாக்­­­கு­­­கள் வித்­­­தி­­­யா­­­சத்­­­தில் சன­­­நா­­­யக செயல் கட்­­­சியைச் சேர்ந்த மனோ­­­கரனைக் கேமரன்மலைத் தொகு­தி­யில் தோற்­­­க­­­டித்­­­துள்­­­ளார். ஜோகூ­ரின் சிகா­மட் தொகு­தி­யில் தேசிய முன்­ன­ணி சார்­பில் போட்­டி­யிட்ட மஇகா துணைத் தலை­வர் எஸ். சுப்­பி­ர­ம­ணி­யம் தம்மை எதிர்த்துப் போட்­டி­யிட்ட பிகே­ஆர் கட்­சி­யின் சுவா ஜுயி மெங்கைக் காட்­டி­லும் 1,217 வாக்­கு­கள் அதி­க­மா­கப் பெற்று வெற்றி பெற்­றார். மக்கள் கூட்­­­ட­­­ணித் தலை­­­வ­­­ரும், எதிர்க்­­­கட்­­­சித் தலை­­­வ­­­ரு­­­மான அன்­­­வார் இப்­­­ரா­­­கிம் பெர்­­­மாத்­­­தாங் பாவ் தொகு­­­தி­­­யில் மீண்­­­டும் வெற்றி பெற்­­­றுள்­­­ளார்.


பினாங்கு, சிலாங்­கூர், கிளந்தான் ஆகிய மாநி­லங்களில் எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­ வெற்றி பெற்றுள்ளது. சரவாக், ஜோகூர் ஆகிய மாநிலங்களைத் தேசிய முன்னணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. அது அந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. ஜனநாயக செயல் கட்சி 5 இடங்களிலும் கெஅடிலான் ஓர் இடத்திலும் வென்றது.


மூலம் தொகு