மருசியா எஃப்1 பயிற்சி ஓட்டுனர் மரியா டி விலோட்டா பயிற்சி விபத்தில் கடும் காயம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், சூலை 4, 2012

மரியா டி விலோட்டா எம்ஆர்-01 (Marussia F1) பந்தய சீருந்தை ஐக்கிய இராச்சியத்தின் காம்பிரிட்ஜ்சயரில் உள்ள டக்ஸ்போர்டு காற்றுவெளி மைதானத்தில் முதல் முறையாகப் பயிற்சிக்காக ஓட்டிய போது இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தார்.


இவர் ஓட்டிய சீருந்து, அதனை பந்தயப்பாதையில் கொண்டு வந்துவிடும் மருசியா உதவு பார வண்டியின் மீது மோதியது. இதனையடுத்து மரியா காம்பிரிட்ஜ்சயரில் அடென்புரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணிக்கு அவரின் முதல் நிறுவல் ஓட்டத்தின் போது இவ்விபத்து நிகழ்ந்தது. சுமார் 200 மீட்டர்/மணி வேகத்தில் சென்ற அச்சீருந்து விபத்து நேரும் பொழுது சற்று மெதுவாகவே சென்றது என பலர் தெரிவித்துள்ளனர். அவர் மயங்கிய நிலையில் 15 நிமிடம் அச்சீருந்திலேயே கிடந்தார்.


32 வயதான மரியா எசுப்பானியாவைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் பார்முலா 1 ஓட்டுனர் எமிலியோ டி விலோட்டாவின் மகள் ஆவார்.


மூலம்

தொகு