மதி இறுக்க நோயின் மரபுணு மூளைத் தொடர்பு கண்டுபிடிப்பு
வெள்ளி, நவம்பர் 12, 2010
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 12 செப்டெம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
- 14 சனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது
- 9 திசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை
ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்க நோய் பாதிக்கும் மரபணுவிற்கும் மதியிறுக்க நோயுடன் தொடர்புடைய மூளைப் பகுதிக்கும் இடையேயான தொடர்பை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சயன்ஸ் டிராசிலேசனல் மெடிசின் (Science Translational Medicine) என்ற மருத்துவ ஆய்விதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவரும் மரபணுவின் இரண்டு படிகளைக் கொண்டிருப்பர். மரபணுவின் ஒரு படியை மட்டும் வைத்திருப்பவர்கள் மன இறுக்க நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது,” என டொரோண்டோவைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்கொட் வான் சீலண்ட் தெரிவித்தார்.
CNTNAP2 (காட்னாப் 2) என்ற மரபணுவைக் கொண்டிருப்பது மதி இறுக்க நோய் (ஆட்டிசம்) வாய்ப்பை அதிகரிப்பதை ஆய்வாளர்கள் நீண்ட நாட்களாக அறிந்திருந்தனர். தற்போது இந்த மரபணுக் கொண்ட சிறுவர்களின் மூளையின் அமைப்பை பற்றி கூடிய மேலும் புரிதல் கிடைத்துள்ளது. இவர்களின் இடது மூளை கூடிய தொடர்புகளையும், பின் மூளை பலவீனமான தொடர்புகளையும் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மன இறுக்க நோய் தொடர்பான சில மருந்துகளுக்கு உதவக் கூடிய தகவல் ஆகும். எனினும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- Scientists make autism breakthrough, த ஸ்டார், நவம்பர் 3, 2010