இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை
ஞாயிறு, திசம்பர் 8, 2013
- 4 பெப்பிரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது
- 12 செப்டெம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
- 14 சனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது
- 9 திசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை
அமேசான், இ-பே போன்ற இணைய அங்காடிகளில் விற்கப்பட்டும் முடி நீக்கி சாதனங்களை வாங்குவதற்கு கனடா சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இத்தகைய சாதனங்கள் முறையான உரிமம் பெறாமலும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமலும் தயாரிக்கப்படுகின்றனவாம்.
இதனால் அவற்றில் இருந்து வெளிவரும் கதிர்கள் உடல்நலக் கேடு உண்டாக்குகின்றன. பலரும் தோல் பாதிக்கப்பட்டும், கண்பார்வை இழந்தும் உள்ளனர் என எச்சரித்துள்ளனர்.
BNB Medical Co. Ltd. தயாரிக்கும் Epsil BSL-10, மற்றும் Carful Company Ltd. தயாரிக்கும் SI-808 ஆகியவை தற்சமயம் ஆபத்து தரக் கூடியவை என அறிய முடிகின்றது. அத்தோடு இவற்றைப் போல மேலும் பல போலி சாதனங்கள் இணைய சந்தையில் விற்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Radiation Emitting Devices Act, the Medical Devices Regulations and the Food and Drugs Act ஆகிய சட்டங்கள் விதித்துள்ள நியமங்களைப் பின்பற்றித் தயாரிக்கப்படும் முடி நீக்கி சாதனங்கள் மட்டுமே உடல்நலத்துக்கு உகந்தது என தெரிவிக்கக்கப்பட்டுள்ளது. முறையற்ற சாதனங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டோர் தமது குடும்ப மருத்துவரிடம் உடனடியாக கலந்தாலோசித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளுமாறும் அறிவுரைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்
தொகு- Health Canada issues hair removal device safety warning, மிசிசாகா.காம், டிசம்பர் 8, 2013