மடகஸ்காரில் இராணுவக் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட படை முகாம் மீட்கப்பட்டது
திங்கள், சூலை 23, 2012
- 17 பெப்ரவரி 2025: இந்தியப் பெருங்கடலின் கீழ் பண்டைய கண்டம் ஒன்றின் சிதறல்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பு
- 17 பெப்ரவரி 2025: மடகஸ்காரில் இராணுவக் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட படை முகாம் மீட்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: மடகஸ்காரில் ஓராண்டுக்குள் தேர்தல் நடத்த உடன்பாடு
- 17 பெப்ரவரி 2025: மடகாஸ்கர் இராணுவக் குழுவினரின் கிளர்ச்சி அடக்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: மடகஸ்கார் அரசைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இராணுவக் குழு அறிவிப்பு
இராணுவத்தினர் சிலரால் முற்றுகையிடப்பட்டிருந்த இராணுவ முகாம் ஒன்றை மடகஸ்கார் இராணுவம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமான நிலையம் அமைந்துள்ள அண்டனனரீவோ நகரைச் சுற்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும், மூவர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்டவர்களில் கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுக்குச் சென்றவர்களில் ஒருவராவார். அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்தே தாம் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று முழுவதும் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையின் போது கிளர்ச்சியாளர்களின் தலைவரும், வேறு ஒரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
மடகஸ்காரில் அண்மைக்காலங்களில் இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபடுவது அடிக்கடி நிகழ்ந்து வரும் சம்பவங்களாகும். 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரின் இவ்வாறான கிளர்ச்சி ஒன்றை அடுத்தே தற்போதைய அரசுத்தலைவர் ஆண்ட்ரி ராசொய்லினா பதவிக்கு வந்தார்.
நேற்றைய இராணுவக் கிளர்ச்சிக்கு காரணம் எதுவும் இராணுவத்தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை. மடகஸ்காரின் அரசியலில் இராணுவம் அடிக்கடி தலையிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மூலம்
தொகு- Madagascar 'quells Antananarivo army barracks mutiny', பிபிசி, சூலை 22, 2012
- Madagascar's mutiny leader Koto Mainty 'killed', பிபிசி, சூலை 23, 2012
- Madagascar's army says it has mutiny under control, மெயில், சூலை 23, 2012