பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், ஏப்பிரல் 8, 2013

ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் தனது 87வது அகவையில் காலமானார் என அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்.


மார்கரெட் தாட்சர் (1975)

பெல் பிரபு இது குறித்து அறிவிக்கையில், "மார்க், கரோல் தாட்சர் இருவரும் தங்களது தாயார் இன்று காலையில் பக்கவாதத்தினால் காலமானார் என்பதை மிக்க வருத்தத்துடன் அறிவித்துள்ளார்கள்" எனக் கூறினார்.


பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்ட தாட்சர், கன்சர்வேட்டிவ் கட்சிப் பிரதமராக 1979 முதல் 1990 வரை பதவியில் இருந்தார். பிரித்தானியப் பிரதமராக பணியாற்றிய ஒரேயொரு பெண் இவராவார்.


1925 இல் பிறந்த மார்கரெட் வடக்கு இலண்டனின் பின்சிலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1959 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979, 1983, 1987 தேர்தல்களில் வெற்றி பெற்றுப் பிரதமரானார். 1992 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். தாட்சரின் அரசு, அரசு நிறுவனங்கள் பலவற்றைத் தனியார் மயமாக்கியது. இவரது காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகள் தொடர்பாக 1982 ஆம் ஆண்டில் அர்ஜெண்டீனாவுடன் போரில் இறங்கியது.


மூலம்

தொகு