பிரபாகரனின் பெற்றோர் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு

சனி, சனவரி 9, 2010


மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மற்றும் அவரது மறைந்த தந்தையாரின் பூதவுடல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.


பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் போது மரணம் அடைந்தார் எனபதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


மறைந்த வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறை தீருவில்லில் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட மூன்று பிரமுகர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்