பிரபல ஓவியர் எம்.எப்.உசைன் லண்டனில் காலமானார்

வியாழன், சூன் 9, 2011

இந்தியாவின் பிரபல ஓவியர் எம். எப். உசைன் இன்று இலண்டனில் காலமானார். அவருக்கு வயது 96 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


ஓவியர் எம். எஃப். உசைன்

மகாராட்டிரத்தில் பதான்பூரில் 1915ம் ஆண்டு பிறந்த இவரது நவீன ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலர் வரை ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் உயரிய சிவில் விருதுகள் பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவற்றைப் பெற்றவர். 1986ல் ராஜ்ய சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.


இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட உசைன் இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளைக் கிளப்பி பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டிலிருந்து துபாய் நகரில் வசித்து வந்தார்.


இந்து தெய்வங்களை நிர்வாணக் கோலத்தில் வரைந்ததால் பெரும் சர்ச்சையில் இவர் சிக்கினார். அவர் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறினார். இந்திய அரசு பலமுறை அவரை திரும்ப அழைத்தும் அவர் இந்தியா வர மறுத்துவிட்டார். சமீபத்தில் அவர் கத்தார் நாட்டுக் குடியுரிமையை பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.


எம்.எப். உசைன், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது மறைவு தேசிய இழப்பு என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.


மூலம் தொகு