பாக்கித்தான் தாலிபான் தலைவர் அக்கிமுல்லா கொல்லப்பட்டார்

ஞாயிறு, நவம்பர் 3, 2013

பாக்கித்தான் தாலிபான் தலைவர் அக்கிமுல்லா மெகுசூத் கொல்லப்பட்டுள்ளதை தாலிபான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


பாக்கித்தானின் வடக்கு வாசிரித்தான் பகுதியில் உள்ள மெகுசூதின் வீட்டின் மீதும் காரின் மீதும் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


இத் தாக்குதல்களில் அக்கிமுல்லா மெகுசூத், அவரது சகோதரர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.


தாலிபான் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக தூதுக்குழுவொன்றை நேற்று சனிக்கிழமை தாலிபான் பகுதிக்கு அனுப்பவுள்ளதாக பாக்கித்தான் அரசு அறிவித்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.


அமெரிக்காவின் இத்தாக்குதல் குறித்து விவாதிக்க பாக்கித்தான் பிரதமர் அமைச்சரவையை அவசரமாகக் கூட்டியுள்ளார். தமது நாட்டு இறைமையை அமெரிக்கா மீறியுள்ளதாக பாக்கித்தான் குற்றம் சாட்டியுள்ளது.


பாக்கித்தான் தாலிபான்களின் முன்னாள் தலைவரும் 2009 ஆம் ஆண்டில் இவ்வாறே அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.


மூலம் தொகு