பாக்கித்தானில் மசூதி அருகே குண்டு வெடித்ததில் 26 பழங்குடியினர் உயிரிழப்பு

சனி, பெப்பிரவரி 18, 2012

பாக்கித்தானின் வடமேற்கில், பழங்குடியினர் வாழும் குர்ரம் பகுதியிலுள்ள பள்ளிவாசல் அருகே சந்தையொன்றில் நேற்று வாகனம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடித்ததில் பலம் வாய்ந்த குண்டொன்று வெடித்தது. இத்தாக்குதலில் 26 பழங்குடியினர் கொல்லப்பட்டனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள பல கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.


இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குர்ரம் பகுதியில் சியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்கிடையே நடந்து வரும் பிரச்சினையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடித்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு சம்பவத்திற்கு காரணமானவர்களை தீவிரமாக தேடுதல் நடத்தினர்.


மூலம் தொகு