பாக்கித்தானில் சமூக இணையதளங்களுக்குத் தடை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், செப்டெம்பர் 21, 2011

ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களுக்கு பாக்கித்தான் தடை விதித்துள்ளது. நீதிபதி சேக் அஜ்மத் சயீத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு இந்த உத்தரவை நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார்.


ஃபேஸ்புக்கில் முகமது நபிக்கு எதிராக மோசமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதால் அதை முற்றாக தடை செய்ய வேண்டும் என முகமது அசாத் சித்திக் என்ற பாகிஸ்தான் வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


இதனடிப்படையிலே ஃபேஸ்புக் மற்றும் யூ ட்யூப்பைத் தொடர்ந்து பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய தளத்திற்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர இதே சர்ச்சை தொடர்பாக மேலும் 450 இணையதளங்களுக்கும் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது. எனினும் கூகுள் மற்றும் இதர தேடுதளங்களை பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டாம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


பாகிஸ்தானில் இத்தளங்களுக்குச் செல்லுபவர்கள், அத் தளம் தடை செய்யப்பட்டுள்ள தகவலையே பார்க்க முடிவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.


தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகத் தளங்களை அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சகம் முற்றாக தடை செய்துவிட்டது. இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது குறித்து அக்டோபர் 6-ம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மூலம்

தொகு