பாக்கித்தானின் பெசாவரிலுள்ள பள்ளியில் தாலிபான்கள் தாக்குதலில் 141 பேர் பலி

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், திசம்பர் 16, 2014


பாக்கித்தானின் பெசாவார் நகரில் பள்ளியில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 141 பேர் பலியாயினர். இதில் 131 பேர் பள்ளிக்குழந்தைகள். இப்பள்ளி இராணுவத்தால் நடத்தப்படுவதாகும்.


இத்தாக்குதலை ஏழு தீவிரவாதிகள் நடத்தியதாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாகவும் இராணுவம் தெரிவித்தது. இதுவே பாக்கித்தானில் தாலிபான்கள் நடத்திய மோசமான தாக்குதலாகும்.


வடக்கு வசிரித்தானிலும் அருகிலுள்ள கைபர் பகுதியிலும் இராணுவ தாக்குதலில் நூற்றுக்கணக்கான தாலிபான்கள் பலியாயினர். இராணுவத்தினரின் இத்தாக்குதலுக்கு பதிலடியாக பள்ளி மீதான இத்தாக்குதலை நடத்தியதாக தாலிபான்களின் பேச்சாளர் பிபிசியின் உருது பதிப்புக்குக்கு தெரிவித்தார்.


தாலிபானின் பேச்சாளர் முகமது உமர் கோராசானி, பாக்கித்தான் இராணுவம் தங்கள் குடும்பத்தையும் பெண்களையும் தாக்குவதால் இராணுவப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாகவும் அப்போது தான் அவர்களால் எங்கள் வலியை உணரமுடியும் என்றும் கூறினார்.


அரசியல்வாதிகள் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கியது இராணுவம் அவர்கள் மீதான தாக்குதலை நீடிக்க உதவவில்லை.


பாக்கித்தான் பிரதமர், இத்தாக்குதல் தேசிய இழப்பு எனவும் தீவிரவாதிகள் தங்கள் நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்கப்படும் வரை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்தார்.


மூலம்

தொகு
  • [1] பிபிசி, டிசம்பர் 16
  • [2] கார்டியன், டிசம்பர் 16