பக்ரைனில் ஆயிரக்கணக்கான சியா இசுலாமியர் போராட்டம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, மே 24, 2013

பக்ரைனில் மூத்த சியா பிரிவு இசுலாமிய மதகுரு சேக் இசா குவாசிம் வீடு காவல்துறையால் சோதனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பக்ரைனின் பெரிய அரச எதிர்ப்பு அமைப்பான அல்-விவெக் அழைப்பின் பேரில் போராட்டம் செய்தனர்.


சேக் இசா குவாசிம் பக்ரைனின் மூத்த சியா பிரிவு இசுலாமிய மதகுரு ஆவார். அவர் வீடு கடந்த வாரம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது சியா பிரிவு முசுலிம்களை ஆத்திரமூட்டியது. பக்ரைனில் பெரும்பான்மையோர் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆனால் மன்னர் சுன்னி பிரிவு இசுலாமியத்தை சேர்ந்தவர்.


சியாக்கள் பல காலமாக தாங்கள் ஓரவஞ்சனையுடன் நடத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். 2011 பிப்ரவரியில் பக்ரைனின் தலைநகர் மனமாவில் மக்களாட்சி வேண்டி பெரும் போராட்டம் நடத்தினர். அதை காவல்துறை ஒடுக்கியது, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 50 பேர் இறந்தனர்.


பக்ரைனின் மன்னர் அமட் அரசில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறினாலும் அல்-விவெக் உள்ளிட்ட பலர் மனித உரிமை மீறல்களும் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறையும் இன்னும் தொடர்வதாக குற்றஞ்சாட்டினர்.


சேக் இசா குவாசிமை பின்பற்றுபவர்கள் பெருமளவில் உள்ளனர். சோதனை நடந்த சமயத்தில் வீட்டில் சேக் இசா குவாசிம் இல்லை என்றும் காவல்துறை பல ஆவணங்களை கைப்பற்றியதாகவும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


மூலம்

தொகு