நோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு

வெள்ளி, பெப்பிரவரி 21, 2014

மருத்துவர்களையும், நோயாளிகளையும் ஏற்றிச் சென்ற லிபிய இராணுவ விமானம் ஒன்று துனீசியாவில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 11 பேரும் கொல்லப்பட்டனர் என துனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தலைநகர் தூனிசில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள குரொம்பாலியா நகரின் வெளி ஒன்றில் அந்தோனொவ்-26 ரக விமானம் வீழ்ந்தது. இவ்விமானத்தில் மூன்று மருத்துவர்களும், இரண்டு நோயாளிகளும் பயணம் செய்திருந்தனர். ஏனையோர் விமானப் பணியாளர்கள் ஆவர். பொதுவாக லிபிய நோயாளிகள் தமது மருத்துவத் தேவைக்கு துனீசியா செல்வது வழக்கமாகும்.


விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் முழுவதுமாக எரிந்து விட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்

தொகு