நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழப்பு

திங்கள், பெப்பிரவரி 17, 2014

நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் கொல்லப்பட்டனர். இறந்த 18 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.


நேபாள ஏர்லைன்சு நிறுவனத்துக்குச் சொந்தமான கனடாவில் வடிவமைக்கப்பட்ட இச்சிறிய ரக விமானம் பொக்காரா என்ற சுற்றுலா நகரில் இருந்து புறப்பட்ட பின்னர் காணாமல் போனது. அர்ககாஞ்சி மாவட்டத்தில் மசினேலெக் என்ற மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களில் ஒருவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். ஏனையோர் நேபாளிகள் ஆவர்.


மோசமான காலநிலையே விபத்துக்குக் காரணம் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


2012 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இடம்பெற்ற இரண்டு விமான விபத்துகளில் 34 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு