நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு
செவ்வாய், பெப்பிரவரி 22, 2011
- 15 நவம்பர் 2016: நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 1 பெப்பிரவரி 2014: இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்
- 17 ஆகத்து 2013: நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின
- 21 சூலை 2013: நியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்
நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கிறைஸ்ட்சேர்ச் நகரில் இன்று இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர். நகரின் கட்டடங்கள் பல தரைமட்டமாயின. பலர் காயமடைந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 1251 மணிக்கு கிறைஸ்ட்சேர்ச் நகரில் இருந்து 10 கிமீ தென்கிழக்கே 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளிடையே சிக்குண்டவர்களை மீட்க நிவாரணப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்தார். இடிபாடுகளை அகற்றி சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிக்கு உதவுதவதற்காக ஆத்திரேலிய அரசு உடனடியாக நிவாரணப் பணியாளர்கள் பலரை கிறைஸ்ட்சேர்ச் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4 இல் இதே பகுதியில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்படுத்திய சேதத்திலும் பார்க்க இம்முறை சேதம் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது 2 பேர் மட்டும் காயமடைந்தனர். நியூசிலாந்தில் ஓராண்டுக்கு 14,000 நிலநடுக்கங்கள் சராசரியாகப் பதியப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 நிலநடுக்கங்களின் அளவு 5.0 இற்கும் அதிகமானவை. 1968 ஆம் ஆண்டில் மிகப்பெரும் நிலநடுக்கம் நியூசிலாந்தில் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவில் தெற்குத் தீவைத் தாக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- 7.0 அளவு நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது, செப்டம்பர் 4, 2010
மூலம்
தொகு- New Zealand earthquake leaves 65 dead, பிபிசி, பெப்ரவரி 22, 2011
- Magnitude 6.3 - SOUTH ISLAND OF NEW ZEALAND United States Geological Survey, பெப்ரவரி 22, 2011
- Deaths confirmed in Christchurch quake, நியூசி எரால்ட், பெப்ரவரி 22, 2011
- Multiple deaths reported to police, TVNZ ONE News, பெப்ரவரி 22, 2011
- Australians caught up in quake, சிட்னி மோர்னிங் எரால்ட், பெப்ரவரி 22, 2011