நியூசிலாந்தில் வெப்ப வளிமக் கூடு வெடித்துச் சிதறியதில் 11 பேர் உயிரிழப்பு

சனி, சனவரி 7, 2012

நியூசிலாந்தில் கார்ட்டர்டன் நகரில் வெப்ப வளிமக் கூடு (hot air balloon) ஒன்று வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 11 பேரும் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


வளிமக்கூடு மின்சாரக் கம்பிகளில் மோதி வெடித்துத் தீப்பற்றியதாக நேரில் கண்டவர்கள் கூறினர். தலைநகர் வெலிங்டனுக்கு 80 கிமீ தூரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வளிமக்கூட்டில் பயணம் செய்த ஐந்து தம்பதியினர், மற்றும் விமானி ஆகியோர் உயிரிழந்தனர்.


வளிகூண்டு கீழே விழும் போது இருவர் அதில் இருந்து பாய்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காலநிலை சீராகத் தெளிவாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.


1979 ஆம் ஆண்டில் ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று அண்டார்க்ட்டிக்காவில் எரெபஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 279 பேர் கொல்லப்பட்டனர். அச்சம்பவத்துக்குப் பின்னர் நியூசிலாந்தில் ஏற்பட்ட பெரும் வான விபத்தாக இது கருதப்படுகிறது.


மூலம் தொகு