தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம்

திங்கள், ஏப்பிரல் 26, 2010

தைவானின் தென்கிழக்குக்கரைக் கடற்பகுதியில் இன்று காலை 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தைவானின் தாய்-துங் என்ற இடத்தில் இருந்து 269 கிமீ (167 மைல்) கிழக்கே இது மையம் கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி 10:59:50 மணிக்கு (02:59:50 UTC) நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.


சுனாமி எச்சரிக்க எதுவும் விடுக்கப்படவில்லை என தைவானின் நடுவண் காலநிலை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்க விடுக்கப்படவில்லை என பசிப்க் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் தலைநகர் தாய்பெய் நகரில் சில கட்டடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டதாகவும், ஆனாலும் எவ்வித சேதமோ அல்லது உயிரிழப்புகளோ அறிவிக்கப்படவில்லை.

மூலம் தொகு