தைவானில் பெரும் நிலநடுக்கம், இடிபாடுகளிடையே பலர் மீட்பு
சனி, பெப்பிரவரி 6, 2016
- 6 பெப்பிரவரி 2016: தைவானில் பெரும் நிலநடுக்கம், இடிபாடுகளிடையே பலர் மீட்பு
- 9 ஏப்பிரல் 2015: தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை
- 27 மார்ச்சு 2013: தாய்வானில் 6.1 அளவு நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம்
- 23 திசம்பர் 2011: கிழக்காசியாவைத் தாக்கிய இரண்டு சூறாவளிகள், நூற்றுக்கணக்கானோர் இறப்பு
தைவானின் தென்பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர்.
தைனான் நகரில் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்தன. 17 மாடிக் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளிடையே குறைந்தது 30 பேர் வரை சிக்குண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கட்டடத்தில் குறைந்தது 256 பேர் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர்களில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றும் அடங்கும். மீட்புப் பணியில் எண்ணூறுக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 200 இற்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தின் பின்னர் குறைந்தது 5 நில அதிர்வுகள் வரை அங்கு நிகழ்ந்துள்ளன. நிலநடுக்கத்தின் அதிர்வு 300 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் தைப்பே வரை உணரப்பட்டுள்ளது.
இரண்டு கண்டத்தட்டுகள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம், ஏப்ரல் 26, 2010
- தாய்வானில் 6.1 அளவு நிலநடுக்கம், ஒருவர் உயிரிழப்பு, மார்ச் 27, 2013
மூலம்
தொகு- Taiwan earthquake: Rescuers in frantic search for missing, பிபிசி, பெப்ரவரி 6, 2016
- Magnitude 6.4 earthquake hits southern Taiwan, topples 17-storey building, ஏபிசி, பெப்ரவரி 6, 2016