தைவான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

வெள்ளி, செப்டம்பர் 11, 2009, தைவான்:

சீனக் குடியரசு


தைவானின் முன்னாள் அதிபர் சென் சூயி-பியானுக்கு ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.


2000-2008 காலப்பகுதியில் அவர் சீனக் குடியரசின் (தைவான்) அதிபராகப் பதவியில் இருந்தபோது மோசடி செய்தது, கருப்பு பணத்திற்கு பொய் கணக்கு காட்டியது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் ஊழல் செய்து 15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணம் சேர்த்தது ஆகிய குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.


சென் சூயி-பியான்

அவருடன் கூட அவரது மனைவியும் அவர் பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 15 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.


மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தைவானில் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.


சீனாவோடு தைவான் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் தற்போதைய தைவானின் ஆளும் தரப்பினர், சீனாவின் பிடியிலி ருந்து விலகி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறிவரும் சென் அவர்களை அவரது அரசியல் கருத்துக்களுக்காக பழிதீர்க்கும் நோக்கத்துடன் தண்டித்திருப்பதாக, சென்னின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

மூலம் தொகு