தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் இந்தியா முதலாம் இடத்தில்
திங்கள், திசம்பர் 7, 2009
- 30 திசம்பர் 2018: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 சனவரி 2018: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 15 திசம்பர் 2016: கத்தார் நாடு காப்லா முறையை ஒழித்துள்ளது
- 29 நவம்பர் 2016: பிரேசிலின் கால்பந்தாட்ட குழு சென்ற வானூர்தி விபத்துக்கு உள்ளாகியதில் 75 பேர் பலி
- 18 சனவரி 2016: ஜல்லிக்கட்டு தடையால் களையிழந்த கிராமங்கள்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தேர்வுத் (டெஸ்ட்) துடுப்பாட்டத் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியத் துடுப்பாட்ட அணி, தேர்வுத் துடுப்பாட்ட அணிகளுக்கான உலகத் தரவரிசையில் முதல் தடவையாக முதல் இடத்துக்கு வந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மும்பையில் நடந்த மூன்றாவது ஆட்டத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
"நான் விளையாடிய அணிகளில் இந்த அணியே மிகவும் சிறந்தது எனச் சொல்வதில் எனக்கு எப்பிரச்சினையும் இல்லை," என சச்சின் டெண்டுல்கார் தெரிவித்தார்.
"கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி,” என இந்திய அணித் தலைவர் டோனி கூறினார். இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் அனைத்துலக அளவிலான தேர்வுத் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.
இதன் மூலம் அனைத்தலுக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன.
இலங்கைக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி, டோனி தலைமையில் கிடைத்த ஏழாவது வெற்றி. டோனி தலைமையில் இந்திய அணி டெஸ்டில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.
மும்பை வெற்றி, டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற 101-வது வெற்றியாகும். இலங்கைக்கு எதிராக 13-வது வெற்றி அது. 1986-87 மற்றும் 1994 தொடர்களில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 3முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
மூலம்
தொகு- "India beat Sri Lanka by an innings to top Test rankings". பிபிசி, டிசம்பர் 6, 2009
- "20 ஆண்டு சச்சின் கனவு பலித்தது!". தமிழ் முரசு, டிசம்பர் 7, 2009