தன்சானியாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் இருநூறுக்கும் அதிகமானோர் இறந்தனர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, செப்டெம்பர் 11, 2011

தான்சானியாவின் சன்சிபார் பகுதியில் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர்.


ஏறத்தாழ 800 பேருடன் சென்ற இப்படகு சன்சிபாரின் உன்குஜா, பெம்பா ஆகிய முக்கிய இந்தியப் பெருங்கடல் தீவுகளுக்கு இடையே கடலில் மூழ்கியது. அளவுக்கதிகமான பயணிகளை இப்படகு ஏற்றிச் சென்றதாக தப்பியவர்கள் தெரிவித்தனர். இயந்திரம் திடீரெனப் பழுதாகியதாலேயே கப்பல் மூழ்கியதாகக் கருதப்படுகிறது. இது குறித்து விசாரணைகளை சன்சிபார் அரசு ஆரம்பித்துள்ளது.


நேற்று சனிக்கிழமை காலையில் இவ்விபத்து ஏற்பட்டது. மாலைக்கிடையில் 600 பேர் மட்டில் காப்பாற்றப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக உன்குஜாவின் விளையாட்டு அரங்கு ஒன்றில் வைக்கப்பட்டன.


மூழ்கிய எம்வி ஸ்பைஸ் ஐலண்டர் என்ற கப்பல் 600 பேர் மட்டுமே பயணிக்கக்கூடியது. இது டார் எஸ் சலாம் இலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டிருந்தது.


மூலம்

தொகு