தன்சானியாவில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, மார்ச்சு 31, 2013

தான்சானியாவின் தார் அல் சலாம் நகரின் மத்திய பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று பல-அடுக்கு கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.


முன்னதாக கட்டடத் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட 45 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கட்டட இடிபாடுகளிடையே சிக்குண்டோர் தமது செல்பேசி வழியாக உறவினர்களுடனும், நண்பர்களுடனும் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தான்சானியாவின் அரசுத்தலைவர் யக்காயா கிக்வெத்த சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.


பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் இந்த மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. இக்கட்டடம் 12 மாடிகளைக் கொண்டது. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் ஒன்றுடன் தொடர்புள்ள நால்வர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


மூலம் தொகு