சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கப்பல் கரை ஒதுங்கியது
வியாழன், நவம்பர் 1, 2012
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் நேற்றுப் புதன்கிழமை மாலை சரியாக நேரம் தெரியவில்லை என்றாலும் நான்கு மணிக்கு பிறகு பிரதீபாகாவேரி என்றக் கப்பல் கரை ஒதுங்கியது.
மேலும் பிரதீபா காவேரி என்ற இந்த கப்பல் நிலம் புயலின் தாக்குதலால் கடலிலிருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கப்பல் கரை ஒதுங்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றனர் ஆகையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மூழ்கிய கப்பலில் இருந்து பதினைந்து மாலுமிகள் இன்று வியாழக்கிழமை காலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர், மேலும் ஆறு பேரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. மும்பாயைச் சேர்ந்த பிரதீபா கப்பல் கம்பனிக்கு இக்கப்பல் சொந்தமானது.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- இலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு, அக்டோபர் 31, 2012
- நிலம் புயல் சென்னையை அடைந்தது, நவம்பர் 1, 2012
மூலம்
தொகு- சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் இன்று கப்பல் கரை ஒதுங்கியது, நக்கீரன், அக்டோபர் 31, 2012
- Cyclone Nilam grounds ship, 15 stranded sailors rescued, 6 still missing, இந்தியா டுடே, நவம்பர் 1, 2012