சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது

புதன், திசம்பர் 25, 2024

தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் 7.7 அளவுக்கு பலமுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை விடப்பட்டு பின் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.


சிலோ தீவுப்பகுதியில் குவல்லோன் நகருக்கு தென் மேற்கே 40 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


அமெரிக்க நில அளவை அமைப்பின் ஆய்வுப்படி 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவல்லோன் துறைமுகத்திலிருந்து 40 கிமீ தென் மேற்கில் மையப்புள்ளி அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது என்கிறது.


நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி நிறுவனமையமான சாலமன் மீன் பிடிப்புத் தொழிலுக்கு புகழ் பெற்றது, இங்கு பல தேசிய பூங்காக்கள் உள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை மீன் பிடி கருவிகளுக்கும் பாதிப்பில்லை.


நிலநடுக்கமே எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என சுற்றுலா நகரான குவல்லோன் நகரவாசி கூறினார். உலகின் பெரும் நிலநடுக்கமாக கருதப்படும் 1960இல் ஏற்பட்ட 9.5 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்ட வால்டிவியா நகருக்கு தெற்கே 350 கிமீ தொலைவில் சிலோ தீவு உள்ளது. இப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் 34.6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நில அளவை அமைப்பு கூறுகிறது.


மூலம் தொகு