சிலியின் நடுப்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம்

திங்கள், சனவரி 3, 2011

தென் அமெரிக்க நாடான சிலியின் நடு மற்றும் தெற்குப் பகுதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெரும் நிலநடுக்கம் தாக்கியது.

திரூவா நகரம்
நிலநடுக்கம் நிலை கொண்ட பகுதி

7.1 அளவுடைய இந்நிலநடுக்கம் உள்ளூர் நேரம் 17:20:16 மணிக்கு 16.9 கிலோமீட்டர் ஆழத்துக்கு தாக்கியதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு, மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு சேதங்கள் இடம்பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 600 கிலோமீட்டர் தென்மேற்கே அமைந்துள்ள திருவா என்ற நகரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆழிப்பேரலை அச்சத்தினால் கரையோரப் பகுதிகளில் உள்ள பல நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் ஆனாலும், ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.


கடந்த பெப்ரவரியில் இதே பகுதியை 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. 400 பேர் வரையில் உயிரிழந்தனர்.


மூலம்தொகு