சிங்கப்பூரில் உலகின் முதலாவது அறிவுக்கலை அருங்காட்சியகம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், திசம்பர் 30, 2010

உலகின் முதலாவது கலை அறிவியல் அருங்காட்சியகம் (ArtScience Museum) சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 17 ஆம் நாள் திறந்து வைக்கப்பட இருக்கிறது. மரீனா பே சாண்ட்ஸ் என்ற இடத்தில் இது அமைந்துள்ளது.


மரீனா குடா, சிங்கப்பூர்

இந்த அருங்காட்சியத்தில் 50,000 சதுர அடி பரப்புள்ள 21 அரங்கங்கள் உள்ளன. இக்காட்சியகங்களில் கலையும் அறிவியலும், ஊடகத்துறையும் தொழில்நுட்பமும், மற்றும் வடிவமைப்பும் கட்டடக்கலையும் ஆகிய துறைகளில் பல காட்சிப் பொருட்கள் இடம்பெறும். அத்துடன் உலகம் முழுவதையும் சேர்ந்த அரிய பொருட்களைக் காண அருமையான வாய்ப்பாக இது திகழும் என்று மெரினா சேண்டஸ் நிறுவனம் தெரிவித்தது.


இங்கு வரும் பார்வையாளர்கள் உந்துதல், உத்வேகம், வெளிப்படுத்தல் ஆகிய மூன்று முக்கிய அரங்கங்களூடாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். “அறிவுக்கலை: ஒரு புத்தாக்கப் பயணம்” என்ற நிரந்தர கண்காட்சியும் அங்கு இடம்பெறவிருக்கிறது. அத்துடன் உரைத் தொடர் ஒன்றையும் இந்த அருங்காட்சியம் தொடங்க இருக்கிறது. அறிவுக்கலைத் துறையில் உலகளாவிய அளவில் சிந்தனைச் சிற்பிகளை சிங்கப்பூருக்கு வரவழைத்து உரை நிகழ்ச்சிகளுக்கு அது ஏற்பாடு செய்யும்.


மூலம்

தொகு