இந்தோனேசியக் காட்டுத்தீ: சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூன் 20, 2013

பதினாறு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த திங்கட்கிழமை இரவு மிகவும் மோசமாக புகை மூட்டம் சிங்கப்பூரைச் சூழ்ந்திருந்தது.


சூன் 21, 2013 இல் சிங்கப்பூரின் தெற்கு பெடோக் வீதி

இந்தோனேசியக் காடுகளில் பற்றி எரியும் தீச் சம்பவங்களை அடுத்து சிங்கப்பூரில் வரலாறு காணாத அளவு புகைமூட்டம் காணப்பட்டது. இந்நிலைமை இன்னும் சில வாரங்கள் நீடித்திருக்கும் என சிங்கப்பூர் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.


நேற்று இரவு 9.00 மணி அளவில் காற்றின் தூய்மைக் கேடு குறியீடு (pollution standards index) 290 ஐ எட்டியது. இன்று வியாழக்கிழமை அது 371 ஆக அதிகரித்தது. 1997ம் ஆண்டில் தூய்மைக் கேடு குறியீடு 226 ஐத் தொட்டிருந்தது. இன்று அதனையும் தாண்டி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.


இந்தோனேசியாவின் சுமாத்திரா காடுகளில் சட்டவிரோத தீவைப்பு சம்பவங்களஏ இப்புகை மூட்டத்த்கிற்குக் காரணம். இது குறித்து இரௌ நாடுகளினதும் அதிகாரிகள் ஜகார்த்தாவில் இன்று நடந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இத்தீவைப்புகளுக்குக் காரணமான நிறுவனங்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு வர்த்தக ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிங்கப்பூர் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் இந்தோனீசியாவுக்கு சிங்கப்பூர் உதவத் தயாராக இருப்பதாக டாக்டர் விவியன் கூறினார்.


"சிங்கப்பூரர்கள் அவசரத் தேவைகளைத் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்," என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மக்களைக் கேட்டுக் கொண்டார். சிங்கப்பூர் இராணுவத்தினர் தமது வெளிப் பயிற்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளனர்.


மலேசியாவின் சில பகுதிகளுக்கும் புகை மூட்டம் பரவியுள்ளது. நாட்டின் தெற்கே 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 1997, 1998 களில் இந்தோனேசியத் தீயினால் தென்கிழக்காசிய நாடுகள் பல புகை மூட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தன.


மூலம்

தொகு