கிர்கிஸ்தானின் அரசுத்தலைவராக ரோசா ஒட்டுன்பாயெவா பதவியேற்றார்

ஞாயிறு, சூலை 4, 2010

இடைக்காலத் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்ட ரோசா ஒட்டுன்பாயெவா கிர்கிஸ்தானின் புதிய அரசுத்தலைவராக நேற்று சனிக்கிழமை பதவியேற்றார்.


ரோசா ஒட்டுன்பாயெவா

கடந்த ஏப்ரலில் முன்னாள் தலைவர் குர்மான்பெக் பாக்கியெவை இரத்தக்களரி மூலம் பதவியில் இருந்து அகற்றி அந்நாட்டின் இடைக்காலத் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்டவர் திருமதி ஒட்டுன்பாயெவா.


முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஒட்டுன்பாயெவா முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தானின் முதலாவது பெண் அரசுத்தலவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.


சென்ற வாரம் நடைபெற்ற நாடளாவிய கருத்து வாக்கெடுப்பில் மக்களாட்சி முறையிலான புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக பெருமளவான மக்கள் வாக்களித்திருந்தனர்.

மூலம்

தொகு