கிரிமியாவில் இருந்து தமது படையினரை வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவு

திங்கள், மார்ச்சு 24, 2014

கிரிமியாவில் இருந்து தமது படைகளை நாட்டுக்குத் திரும்புமாறு உக்ரைனிய இடைக்கால அரசுத்தலைவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் உத்தரவிட்டுள்ளார்.


கிரிமியாவில் நிலை கொண்டுள்ள உக்ரைனிய இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உருசியப் படையினரால் உயிராபத்து நேரக்கூடிய நிலைமை தோன்றியுள்ளதால் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதாக துர்ச்சீனொவ் கூறினார். பியோதேசியா உட்பட கிரிமியக் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை உருசியப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


இம்மாத ஆரம்பத்தில் உருசியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரிமியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றை அடுத்து உருசியா கிரிமியாவை இணைத்துக் கொண்டது. இவ்விணைப்பு சட்டவிரோதமானது என உக்ரைனும், மேற்கு நாடுகளும் கூறியுள்ளன.


மூலம் தொகு