உருசியாவுடன் இணைக்க கிரிமியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்

வியாழன், மார்ச்சு 6, 2014

உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமியாவை உருசியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மார்ச் 16 ஆம் நாள் இது பொது வாக்கெடுப்புக்கு விடப்படும் என நாடாளுமன்றம் அறிவித்தது.


கிரிமியா தன்னாட்சிக் குடியரசு

உருசியாவுடன் கிரிமியா இணைய எடுக்கும் எந்த ஒரு முடிவும் அரசியலமைப்புக்கு விரோதமானது என உக்ரைனிய அமைச்சர் பாவ்லோ செரெமெத்தியேவா கருத்துத் தெரிவித்துள்ளார். கிரிமியா பிரச்சினையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரலாம் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரசல்சில் கூடி ஆராய்ந்து வரும் வேளையில், கிரிமிய நாடாளுமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது.


கிரிமியாவின் இம்முடிவு உருசியத் தலைவர் பூட்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


உக்ரைனின் மாஸ்கோ-சார்பு அரசுத்தலைவர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து உருசியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கிரிமியாவில் வன்முறைகள் வெடித்தன. உருசியப் படையினரும், உருசிய சார்பு உக்ரைனியப் படையினரும் கிரிமியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


மூலம் தொகு