கவிஞர் வாலி காலமானார்

வெள்ளி, சூலை 19, 2013

கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான வாலி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த ஆறு வார காலமாக உடல்நலக் குறைவால், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் உடல்நிலை நேற்று மேலும் மோசமடைந்து மாலை 5.10 மணிக்கு உயிர் பிரிந்தது.


ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருவரங்கத்தில் பிறந்தவர். வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.


2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.


வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வாலிக்கு பாலாஜி எனும் மகன் உள்ளார்.


மூலம் தொகு

 
"https://ta.wikinews.org/w/index.php?title=கவிஞர்_வாலி_காலமானார்&oldid=50325" இலிருந்து மீள்விக்கப்பட்டது