கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா காலமானார்
செவ்வாய், பெப்பிரவரி 14, 2012
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 21 மார்ச்சு 2017: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 6 நவம்பர் 2015: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 9 ஏப்பிரல் 2015: பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் காலமானார்
இந்தியாவின் கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி. எஸ். ஆச்சார்யா (71) கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்ட போது இருக்கையில் அமர்ந்தவாறே திடீரென மேடையில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
இன்று காலை மங்களூரில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த இவர் விமான நிலையத்தில் இருந்து நேராக நிருபதுங்கா ரோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சென்றார். அங்கு நடநத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திடீர் என்று மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மல்லிகே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு சாந்தா என்ற மனைவியும், 4 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் சூலை 4 1940-இல் பிறந்தவர்
உயர் கல்வித்துறை அமைச்சர் ஆச்சார்யா எடியூரப்பா அமைச்சரவையில், உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது பாஜக மூத்த தலைவரான ஆச்சார்யா 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.
மூலம்
தொகு- Karnataka minister V S Acharya dead , timesofindia, பெப்ரவரி 14, 2012
- Karnataka Higher Education Minister VS Acharya, 71, dead, dnaindia, பெப்ரவரி 14, 2012
- அமைச்சர் காலமானார், தினகரன், பெப்ரவரி 14, 2012
- மேடையில் மயங்கி விழுந்து கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் மரணம், தட்ஸ்தமிழ், பெப்ரவரி 14, 2012
- கர்நாடக அமைச்சர் மரணம், தினமலர், பெப்ரவரி 14, 2012