கராச்சியில் தொழிற்சாலைத் தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
புதன், செப்டெம்பர் 12, 2012
- 26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்பிரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 29 செப்டெம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாக்கித்தானின் கராச்சி நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 247 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இத்தீவிபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். எரியும் கட்டடத்தின் உள்ளே இருந்து பலர் வெளியே குதித்தனர். 40 இற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபடுத்தப்பட்டன.
நாலு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலை இன்று காலை வரை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாகவும், இறந்த உடல்கள் பல இடிபாடுகளுக்கிடையேயிருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆடைத் தொழிற்சாலைகள் பாக்கித்தானின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆடை உற்பத்திப் பொருட்கள் மொத்த ஏற்றுமதியில் 55.6 விழுக்காடு ஆகும்.
நேற்று இடம்பெற்ற வேறொரு சம்பவத்தில் லாகூர் நகரில் ஒரு காலணித் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியதில் 23 பேர் கொல்லப்பட்டனர். லாகூர் தீ மின்சார ஒழுக்கினால் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்
தொகு- Death toll from Karachi factory fire soars, பிபிசி, செப்டம்பர் 12, 2012
- Pakistan: Hundreds Die In factory Blazes, ஸ்கை செய்திகள், செப்டம்பர் 12, 2012
- Karachi factory fire: Relatives bury dead, பிபிசி, செப்டம்பர் 13, 2012