ஐரோப்பிய உரோமா மக்கள் இந்திய தலித்துகளின் சந்ததிகள் என ஆய்வுகள் தெரிவிப்பு
திங்கள், திசம்பர் 10, 2012
- 26 நவம்பர் 2013: புத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது
- 9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு
- 11 சூலை 2013: சீனாவில் 5,000 ஆண்டுகள் பழைமையான எழுத்துகளைக் கொண்ட கற்கோடாலிகள் கண்டுபிடிப்பு
- 28 சூன் 2013: பெருவில் 1,200 ஆண்டுகள் பழமையான வாரி அரசுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது
- 2 சூன் 2013: இலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் வாழும் ரோமா ஜிப்சிகள் இந்தியாவின் தலித் மக்களின் வம்சாவழிகள் எனவும் இவர்கள் இந்தியாவில் இருந்து 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் எனவும் மரபியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜிப்சிகளின் மொழி, சமக்கிருதச் சொற்களின் கலப்பு, மற்றும் நிறம் போன்றவற்றைக் கொண்டு இவர்கள் இந்திய வம்சாவழியினர் என பல ஆண்டு காலமாக நம்பப்பட்டு வந்தது. ஆனாலும், அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது கேம்பிரிட்ச் பல்கலைக்கழகப் பேராசிரியர் தூமசு கிவிசில்டு மற்றும் இந்திய, எஸ்தோனிய வரலாற்றாளர்களின் ஆய்வுகள் இவர்கள் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்துள்ளன. ஜிப்சிகளின் மூதாதைகளின் வாழ்விடம், மற்றும் அவர்களின் சமூகப் பின்னணி போன்றவையும் அறியப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ரோமா ஆண்களின் டிஎன்ஏ மாதிரிகளின் Y மரபுத்திரிகள் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இம்மாத நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் படி இந்தியாவின் வட-மேற்குப் பகுதியில் வதியும் தலித் மக்களின் மாதிரிகள் ரோமாமக்களின் மாதிரிகளுடன் ஒத்துப் போயின.
ஐரோப்பாவில் உள்ள ரோமா மக்களின் மூதாதைகள் இன்றைய பஞ்சாப் பிரதேசத்தில் இருந்து கிபி 1001 இற்கும் 1026 இடைப்பட்ட காலத்தில் தமது சாதியினரின் நிலைகளை உயர்த்தும் பொருட்டு இடம்பெற்ற போர்களினால் மேற்கு நோக்கி முதன் முதலில் நகர்ந்தனர் என் வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இன்றைய பாக்கித்தான் போன்ற பிரதேசங்களில் இந்து இராச்சியங்களின் வீழ்ச்சியை அடுத்து இடம்பெயர நேர்ந்தது. இந்திய உபகண்டத்தில் இசுலாம் பரவிய காலத்தில் அகதிகளாக வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவுக்கு இவர்கள் இடம்பெயர்ந்தனர்.
பிரித்தானியாவில் முதன் முதலாக ஜிப்சிகள் கிபி 1500 ஆம் ஆண்டளவில் வணிகர்களாகவும், கைவினைஞர்களாகவும், குதிரை வர்த்தகர்களாகவும் அறியப்பட்டனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- ரோமா ஜிப்சிகளை பிரான்ஸ் ருமேனியாவுக்குத் திருப்பி அனுப்புகிறது, ஆகத்து 20, 2012
- ரோமா மக்களை வெளியேற்றுவதற்கு பிரான்சு மீது ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கை, செப்டம்பர் 15, 2012
- ரோமா மக்களுக்கு எதிராக பல்கேரியர்கள் ஆர்ப்பாட்டம், அக்டோபர் , 2011
மூலம்
தொகு- European Roma descended from Indian 'untouchables', genetic study shows, டெலிகிராப், டிசம்பர் 3, 2012
- Study shows Roma descended from Indian ‘untouchables’, பல்கலைக்கழக உலகச் செய்திகள், டிசம்பர் 9, 2012
- Centuries Of Discrimination: European Roma Linked To India’s ‘Untouchables’, இண்டர்நேசனல் பிசினஸ் டைம்ஸ், டிசம்பர் 4, 2012