ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது

சனி, மே 9, 2015

2015 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் (பழமைவாத) கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.


இத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி காமன்சு சபையிலுள்ள 650 தொகுதிகளில் 321 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறுதிப்பெரும்பான்மைக்கு 326 தொகுதிகளில் வென்றால் போதும்.


இரண்டாவதாக வந்த தொழிற் கட்சி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக வந்த இசுக்காட்லாந்து தேசிய கட்சி 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தாராளவாத சனநாயக் கட்சியும் சனநாயக கூட்டுறவுக் கட்சியும் தலா 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சின் பெயின் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது, சமூக சனநாயக தொழிற் கட்சியும் பிளெயிட் சிம்ரு கட்சியும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன, அல்ஸ்டர் கூட்டுறவுக் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பசுமைக் கட்சியும் ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சியும் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றன.


கடந்த தேர்தலில் தாராளவாத சனநாயக் கட்சி 57 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. துணை பிரதமர் பதவியும் இக்கட்சிக்கு கிடைத்தது. இத்தேர்தலில் இக்கட்சி பெரும் சரிவைக்கண்டது. கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இம்முறை 15.2% வாக்குகள் குறைவாக இது பெற்றது.


ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி 12.6% வாக்குகள் பெற்றும் சதவீத அடிப்படையில் மூன்றாவதாக இருந்தும் இக்கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி நாடு தழுவிய அளவில் 12.6% வாக்குகளை பெற்றது இங்கிலாந்து பகுதியில் 14% வாக்குகளை பெற்றது. இது தாராளவாத சனநாயக்கட்சியின் மோசமான தோல்விக்கு காரணம் என நம்பப்படுகிறது. இக்கட்சி கன்சர்வேடிவ்களை பாதித்ததை விட தொழிலாளர் கட்சியை அதிகம் பாதித்து அவர்கள் நிறைய இடங்களில் வெல்ல முடியாமல் போனதற்கு காரணமாகியது.


இசுக்காட்லாந்து தேசிய கட்சி 4.7% வாக்குகள் பெற்ற போதும் இது 56 தொகுதிகளை கைப்பற்றியது. இக்கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது. கடந்த முறை இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.மூலம்

தொகு