எத்தியோப்பிய ஊடகவியலாளர் எசுக்கிண்டர் நேகாவிற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வெள்ளி, சூலை 13, 2012

எத்தியோப்பிய பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக ஊடகவியலாளரும், வலைப்பதிவருமான எசுகிண்டர் நேகாவிற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் இறுதியில் நேகா மற்றும் 23 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் கின்பொட் செவன் என்ற எதிர்க்கட்சிக் குழு ஒன்றுடன் தொடர்புள்ளவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வியக்கம் எத்தியோப்பியாவில் பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்துவாலெம் அராகே என்ற எதிர்க்கட்சி உறுப்பினருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


கடந்த மே மாதத்தில் எசுகிண்டர் நேகாவிற்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற பென் அமெரிக்காவின் எழுதுவதற்கு உரிமை என்ற அமைப்பின் உயர் விருது வழங்கப்பட்டிருந்தது. மனித உரிமை அமைப்புகள் பல எத்தியோப்பியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளன.


மூலம் தொகு