எக்குவடோர் தேர்தலில் லெனின் மொரினோ வெற்றி பெற்றார்

புதன், ஏப்பிரல் 3, 2024

சோசயலிச வேட்பாளர் லெனின் மொரிடோ திங்கள் கிழமை தேர்தல் வெற்றியை கொண்டாடினார். இவர் முன்னாள் துணை அதிபர் ஆவார். இவர் வெளியேறும் அதிபர் ரவெல் பெரிராவின் நண்பர், பெரிரா இத் தேர்தலில் லெனின் மொரிடோவை ஆதரித்தார்.

வெனின் மொரேனோ


சுமார் 99% வாக்குகள் எண்ணப்பட்டதில் சோசியலச கட்சியின் லெனின் மொரினோ 51 % வாக்குகளும் அவரை எதிர்த்த குலிர்மோ லாசோ 49% வாக்குகளும் பெற்றனர். இது 230,000 வாக்கு வேறுபாடு ஆகும். லாசோ தேர்தலில் குழறுபடி நடந்துள்ளதாகவும் மீண்டும் வாக்குகளை எண்ணவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


மூன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் லாசோ வெற்றி பெறுவார் என கூறியிருந்தன. உள்ளூர் நேரம் மாலை ஐந்து மணியளவில் லாசோ எக்குவடோர் கொடியை அசைத்துக்கொண்டு வெளிவந்தார், கீச்சில் மக்களாட்சி வென்றுள்ளது என கீச்சினார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் எக்குவடோர் தேர்தல் ஆணையம் லெனின் முன்னனியில் உள்ளதாக அறிவித்தது. அதையடுத்து லாசோ தாங்கள் முட்டாள்கள் இல்லை எனவும் எக்குவடோர் மக்களை அவர்கள் வாக்கை காக்கவும் கீச்சு அனுப்பினார்.


லாசோ தான் வெற்றி பெற்றால் விக்கிலீக்சு நிறுவனர் அசான்சேவை 30 நாட்களில் இலண்டனில் உள்ள தூதரகத்தில் இருந்து வெளியேற்றுவதாக கூறியிறுந்தார். லெனின் வெளியேற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. லெனின் முன்னிலையில் உள்ளார் என்று தெரிந்ததும் அசான்சே லாசோ நாட்டை விட்டு வெளியேற 30 நாட்கள் உள்ளதாக கீச்சினார்.


இருபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வழிப்பறியில் சுடப்பட்டதில் லெனின் தன் கால்களை இழந்தார் அது முதல் சக்கர நாற்காலியில் தான் நடமாடுகிறார். இவர் ஐநாவின் ஊனமுற்றோருக்கான சிறப்பு தூதரவும் இருந்துள்ளார்.


மூலம் தொகு