எகிப்து கடற்கரையில் புலம் பெயர்வோர் படகு கவிழ்ந்ததில் 100இக்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்

வியாழன், செப்டெம்பர் 22, 2016

550 மக்களை ஏற்றிக்கொண்டு சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு புறப்பட்ட படகு எகிப்து கடற்கரையிலிருந்து 12 கிமீ தொலைவில் கவிழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


படகு விபத்தில் தப்பித்தவர்கள் புதன்கிழமை படகு கவிழ்ந்ததாக கூறினர். இது வரை துறைமுக நகரான ரோசட்டாவுக்கு அருகிலிருந்து 163 பேரை அதிகாரிகள் காப்பாற்றி உள்ளனர். 42 உடல்களை மீட்டுள்ளனர். காப்பாற்றபட்டவர்களில் நூறு பேருக்கும் அதிகமானவர்கள் எகிப்தியர்கள்.


நான்கு கடத்தல்காரர்களை காவல்துறை கைதுசெய்துள்ளது. அவர்கள் மீது கொலை, மக்களை கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


2014இக்கு பிறகு 10,000 மக்கள் ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் முயற்சியில் மத்திய தரைக் கடலில் இறந்துள்ளதாக ஐநா கூறியுள்ளது.


அதிக மக்களை ஏற்றும் பொருட்டு இப்படகு ஐந்து நாட்கள் கடற்கரைக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தது என தப்பியவர்கள் கூறினர்.


பாதுகாப்பு உடை அணியவேண்டுமென்றால் அதிக பணம் தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 150 பேரை ஏற்றியதால் தான் படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து என தெரிகிறது. காப்பாற்றபட்டவர்கள் அனைவரும் உள்ளூர் மீன் பிடி படகுகளாயே காப்பாற்றபட்டனர் என மீனவர் அப்துல்ரகுமான் அல் முகமதி கூறினார்.


இது வரை இறந்தவர்களில் 10 பெண்கள் 31 இளைஞர்கள் 1 குழந்தை என அதிகாரிகள் தெரிவித்தனர். இப்படகில் எகிப்தியர்கள், சிரியர்கள், சூடானியர்கள், சோமாலியர்கள், எரித்திரியர்கள் இருந்தனர்.


பன்னாட்டு புலம்பெயர்வோர் அமைப்பு இவ்வாண்டில் 3,000 பேர் புலம் பெயரும்போது மத்திய தரைக் கடலில் இறந்திருப்பதாக கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய எல்லைப்பாதுகாப்பு அமைப்பு இவ்வாண்டு எகிப்திலிருந்மது 12,000 பேர் இத்தாலிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளது. 2015இல் 7,000 பேரே வந்தனர்மூலம்

தொகு