எகிப்துஏர் வானூர்தி கடத்தல் முடிவுக்கு வந்தது

வெள்ளி, மார்ச்சு 29, 2024

சைப்பரசு தீவின் வரைபடம் (தெற்கிலுள்ளது சைப்ரசு குடியரசு, லார்னகா இங்கு தான் உள்ளது, வடக்கிலுள்ளது வடசைப்ரசு

21 வெளிநாட்டவர், 15 ஊழியர்கள் என்று மொத்தம் 81 பேர்களுடன் பயணித்த எகிப்துஏர் வானூர்தியின் கடத்தல் கடத்தல்காரர் லார்னகா வானூர்தி நிலையத்தில் சைப்ரசு அதிகாரிகளிடம் தன்னை ஒப்புவித்ததை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

படிமம்:Larnaca International Airport night Republic of Cyprus.jpg
லார்னகா வானூர்தி நிலையம் (இரவில்)


லார்னகா வானூர்தி நிலையத்தில் ஒரு பதற்றமான நெருக்கடி நிலைக்குப் பின்னர் வானூர்தியைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தனது கைகளைத் தூக்கியபடி வானூர்தியிலிருந்து வெளியே வந்த அவர் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார்


அலெக்சாண்டிரியாவிலிருந்து கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த இந்த எகிப்துஏர் வானூர்தி, தற்கொலை குண்டு பொருத்தப்பட்டிருந்த அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறிக்கொண்ட ஒருவரால் சைப்ரசுக்குக் கடத்திச் செல்லப்பட்டது. அவரது கோரிக்கைகள் என்ன என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.


அவர் மன நலம் குன்றியவர் என்றும், அவருக்கு அரசியல் நோக்கங்கள் ஏதும் இல்லை என்றும் சைப்ரஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். சைப்ரசு அதிபர் நிகோசு அனத்தாசிட்சு செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த வானூர்தி கடத்தலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை என்றார்.


சில தகவல்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் சமஹா அல்லது எல்டின் முசுதப்பா என்பவர் தான் வானூர்தியைக் கடத்தியதாக தெரிவிக்கின்றன. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக் பேராசிரியரான இவர் சைப்ரசில் வசிக்கும் சைப்ரசு நாட்டைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியைப் பார்க்க விரும்புவதாக சைப்ரசு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறின.


மூலம்

தொகு