எகிப்தில் வளிக்கூண்டு வெடித்து 19 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

செவ்வாய், பெப்பிரவரி 26, 2013

எகிப்திய நகரான லக்சோரில் வெப்ப வளிக்கூண்டு (பலூன்) நிலத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த 19 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பிரித்தானியா, பிரான்சு, அங்கேரி, ஹொங்கொங், சப்பானியர்களும் அடங்குவர்.


1,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பலூன் வெடித்து தீப்பற்றி நிலத்தில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பலூன் ஓட்டுனர் உட்பட குறைந்தது இருவர் உயிருடன் தப்பினர். இவர்கள் பலூன் தரையில் மோத முன்னரே பலூனில் இருந்து வெளியே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.


இவ்விபத்தை அடுத்து லக்சோர் நகரில் அனைத்து வளிக்கூண்டுப் பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை.


லக்சோர் நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா நகரம் ஆகும்.


மூலம் தொகு