எகிப்தில் ஆறு கிறித்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, சனவரி 8, 2010


எகிப்திய கிறித்தவர்களில் ஒருபிரிவான காப்டிக் கிறித்தவர்கள் ஆறுபேரும், காவல்துறையைச்சேர்ந்த ஒருவரும், வாகனத்தில் வந்த ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொப்டிக் கிறிஸ்தவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தின்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் உருவானது.


எகிப்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு கிறித்தவ தேவாலயத்தில் ஜனவரி 7 ஆம் நாள் இடம்பெறும் கொப்ட்டிக் கிறிஸ்மஸ் முன்தினப் பிரார்த்தனை முடித்து விட்டுத் திரும்பிய கிறித்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர் நடத்திய ஆறுபேர் கொல்லப்பட்டனர்.


கொப்டிக் கிறித்தவர் ஒருவர், முஸ்லிம் பெண் ஒருவரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்வினையாகவே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குழுமிய ஆர்பாட்டக்காரர்கள் கல்லெறிதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மோதல்கள் உருவாயின.

மூலம்

தொகு