ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 1வது இடத்தில் நியூசிலாந்து

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், நவம்பர் 18, 2009


உலகில் லஞ்ச ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து, டென்மார்க் நாடுகளுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் சிங்கப்பூரும் சுவீடனும் இடம்பெற்றுள்ளன. இந்தியா 84வது இடத்திலும், இலங்கை 98வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.


ஊழலுக்கு எதிரான பிரச்சார அமைப்பான டிரான்பரன்சி இன்டர்நேசனல் வளர்ச்சியடைந்த நாடுகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டக் கூடாது என்று கூறியுள்ளது.


இந்த நாடுகளில் இருந்து இயங்கும் நிறுவனங்கள் பல சமயங்களில் லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடுவதாகக கூறியுள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல், உதவி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஒளிவுமறைவின்றி செய்யப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.


மொத்தம் 10 புள்ளிகளில் சிங்கப்பூர் 9.2 புள்ளிகளைப் பெற்றிருந்தது.


லஞ்ச ஊழல் மிக அதிகமான நாடுகள் பட்டியலில் முதலிடம் சோமாலியாவுக்கு. அடுத்து ஆப்கானிஸ்தான், மியன்மார், சூடான், ஈராக் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மூலம்

தொகு