இத்தாலிய உல்லாசக் கப்பல் மூழ்கியதில் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர், 40 பேரைக் காணவில்லை
ஞாயிறு, சனவரி 15, 2012
- 17 பெப்ரவரி 2025: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 17 பெப்ரவரி 2025: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு
உல்லாசப் பயணிகள் கப்பல் ஒன்று இத்தாலியின் மேற்குக் கரையில் வெள்ளிக்கிழமை இரவு மூழ்கியதை அடுத்து 4,000 பேர் வரையில் உயிர்க்காப்புப் படகுகள் மூலம் கரைக்கு வந்து சேர்ந்தனர். சிலர் நீந்தியே கரையை அடைய வேண்டியிருந்தது. 40 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.


கொஸ்டா கொன்கோர்டியா என்ற இக்கப்பல் கிகிலியோ தீவில் 200 மீட்டர் தொலைவில் சரிந்தபடி காணப்படுகிறது. காணாமல் போனோரைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
ரோம் நகரில் இருந்து நடுநிலக் கடல் பகுதிக்கு உல்லாசப் பயனத்தை ஆரம்பித்த இக்கப்பல் தனது பயணத்தின் முதலாவது நாள் இரவில் மூழ்கியுள்ளது. கப்பலின் காப்டன் பிரான்சிஸ்கோ பெட்டினோவைக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பயணிகள் அனைவரும் வெளியேறும் முன்னரே காப்டன் கப்பலை விட்டு வெளியேறி விட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கப்பலில் 3,200 பயணிகளும் ஆயிரம் பேர் வரையான சிப்பந்திகளும் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணிகளில் இத்தாலி, செருமன், பிரெஞ்சு, பிரித்தானியர், மற்றும் உருசியர் உட்படப் பல வெளி நாட்டவர்களும் இருந்தனர். இரண்டு பிரெஞ்சுப் பயணிகளும் பெருவைச் சேர்ந்த ஒரு பணியாளரும் கொல்லப்பட்டனர். மேலும் இரு வயோதிகப்ர்களின் இறந்த உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 40 பேர் வரையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"நாம் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்த போது கப்பல் ஏதோ ஒன்றுடன் மோதியது போன்ற பலத்த சப்தம் கேட்டது," என பயணி ஒருவர் தெரிவித்தார். "கப்பலினுள் கடல் நீர் உள்ளே வரத் தொடங்கிய போது, கப்பல் சரியத் தொடங்கியது."
அவசர நிலையில் கப்பலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்று தமக்கு எவ்ந்த அறிவுறுத்தல்களும் தரப்படவில்லை எனப் பயணிகள் கூறினர். அவசர வெளியேற்றப் பயிற்சி சனிக்கிழமைக்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல பயணிகள் 1912 ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதை இவ்விபத்துடன் ஒப்பிட்டனர். அப்போது 1,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், கப்பலின் அறை ஒன்றில் இருந்து மூவர் இன்று காப்பாற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் இருவர் தென் கொரியாவில் இருந்து தமது தேன் நிலவைக் கழிக்கவென வந்தவர்கள் ஆவர்.
114,500 தொன் எடையுள்ள கொஸ்டா கொன்கோர்டியா கப்பல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியதாகும். இது 2006 சூலை மாதத்தில் சேவைக்கு விடப்பட்டது.
மூலம்
தொகு- Italy cruise ship Costa Concordia: Search for missing, பிபிசி, சனவரி 14, 2012
- Costa Concordia captain detained over fatal shipwreck, ரியாநோவஸ்தி, சனவரி 14, 2012
- Three dead and around 40 missing after cruise ship sinks, த சன், சனவரி 14, 2012
- Costa Concordia: Cruise ship survivors found, பிபிசி, சனவரி 15, 2012