இத்தாலியில் நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு
ஞாயிறு, மே 20, 2012
- 28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 19 ஏப்பிரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு
- 14 மார்ச்சு 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 11 மார்ச்சு 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு
இத்தாலியின் வடக்கே பொலோனா நகரில் இன்று இடம்பெற்ற 5.9 அளவு நிலநடுக்கத்தில் முவர் கொல்லப்பட்டனர், மேலும் 50 பேர் வரையில் காயமடைந்தனர்.
தொழிற்சாலை ஒன்று இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வேறு கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளிடையே மேலும் பலர் அகப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அச்சத்தில் தமது வீடுகளில் இருந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர்.
ஆரம்பத்தில் 5.9 ஆகக் கணிக்கப்பட்ட நிலநடுக்கம் இன்று அதிகாலை 4:04 மணிக்கு பலோனா நகரில் இருந்து 35 கிமீ தூரத்தில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இரண்டாவது தடவை 5.1 அளவில் நிலநடுக்கம் தாக்கியிருந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சில கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2009 ஆம் ஆண்டில் 6.3 அளவு நிலநடுக்கம் இத்தாலியின் மத்திய பகுதியத் தாக்கியதில் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.
மூலம்
தொகு- Several killed in Italian earthquake, அல்ஜசீரா, மே 20, 2012
- Three killed in northern Italy earthquake, பிபிசி, மே 20, 2012