ஆறாம் விக்கெட்டுக்கான ஓட்டக் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை

வெள்ளி, நவம்பர் 20, 2009


இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் மகேல ஜயவர்த்தன-பிரசன்னா ஜயவர்த்தன சோடி மட்டைவீச்சில் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது.


இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் இலங்கை அணி ஆடிவரும் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இந்த சோடி குவித்துள்ள 351 ஓட்டங்கள் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஆறாவது விக்கெட்டுக்காக குவிக்கப்பட்ட மிக அதிக ஓட்டங்கள் ஆகும்.


72 ஆண்டுகளுக்கு முன் 1937ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டொன் பிரட்மனும் ஜேக் ஃபிங்கிள்டனும் இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருந்த 346 ஓட்டங்களே இதற்கு முன் ஆறாம் விக்கெட்டுக்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக இருந்துவந்தது.


மேலும் இலங்கை அணி முதல் இன்னிங்சில் எடுத்துள்ள 7 விக்கெட் இழப்பிற்கு 760 ஓட்டங்கள் இந்திய மண்ணில் நடந்துள்ள அதிகபட்ச இன்னிங்ஸ் ஓட்டக் குவிப்பு ஆகும். இந்த ஆட்டம் அநேகமாக வெற்றி தோல்வியின்றி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம் தொகு