அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி

வியாழன், மே 24, 2012

மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் தற்போது நடைபெறும் 21வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடரில், முதல் லீக் போட்டியில் இன்று வியாழக்கிழமை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இத்தொடரில் இந்தியா, பாக்கித்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் விளையாடுகின்றன.


முன்னதாக, பாக்கித்தான் அணி அர்ஜெண்டீனிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்று தடவைகள் வெற்றியாளராக வந்திருந்த பாக்கித்தான் அணி சென்ற ஆண்டு நடந்த அஸ்லான் ஷா போட்டித்தொடரில் இறுதிப் போட்டியில் ஆத்திரேலியாவிடம் தோற்றது.

மூலம்

தொகு